search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க. கூட்டம்"

    • நகர தலைவர் திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர் கூறினர்.

    கடலூர்:

    வடலூரில் பா.ஜ.க. நகர ஆலோசனைக் கூட்டம் நகர தலைவர் திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் அக்கினி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி, வந்தே பாரத் ரெயில் திட்டம், பெண்கள் இட ஒதுக்கீடு வரவேற்பு, புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கருத்து கள் ஆலோசிக்கப்பட்டது. இதில் வந்தே பாரத் ெரயில், மகளிர் இடஒதுக்கீடு குறித்த பிரசாரம் வடலூரில் நடைபெறவில்லை எனவும், பா.ஜ.க. பெண் நிர்வாகி களுக்கு சிலர் போன் செய்து மிரட்டுவதாகவும் கூட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர் கூறினர்.

    இதனை தொடர்ந்து இதே கருத்தினை வலி யுறுத்தி பலரும் ஒரே சம யத்தில் பேசினர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப் பம் ஏற்பட்டது. அப்போது, ஒருசிலர் எழுந்து நாற்காலி களை தூக்கிவீசினர். இத னால் கை கலப்பு ஏற்படும் சூழல் உருவானது. அப்போது, பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள், தலை யிட்டு அனைவரையும் சமா தானம் செய்தனர். இதை யடுத்து ஆலோசனைக் கூட்டம் முடிந்து அனை வரும் கலைந்து சென்றனர்.

    • பா.ஜனதாவின் நிர்வாகிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தென்காசி:

    தென்காசியில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் தென்காசி மாவட்ட பா.ஜனதாவின் அணி பிரிவு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் நிர்வாகிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன்,அருள் செல்வன், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொரு ளாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகவும், கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் கிருஷ்ணன், தென்காசி மாவட்ட பா.ஜனதா கட்சி பார்வையாளர் மகாராஜன், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் கோதை மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஜனவரி மாதம் பாரதீய ஜனதா கட்சியின் அணி பிரிவுகள் சார்பில் தென்காசியில் மாபெரும் மாநாடு நடத்துவது என்றும், பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயங்களையும், பாதிக்க ப்படும் விஷயங்களையும் முன்னெடுத்து போராட்டம் நடத்துவது, மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பூத்களிலும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்துவது, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி வரவேற்று பேசினார். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துலட்சுமி, முத்துக்குமார், பால்ராஜ், மாவட்ட செயலாளர்கள் சுப்பிர மணியன், அர்ஜுனன், புலிக்குட்டி,ராஜலட்சுமி மற்றும் மாவட்ட அணி பிரிவு தலைவர்கள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பாலமேட்டில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
    • மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கிராம மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அலங்காநல்லூர்

    பாலமேட்டில் பாரதிய ஜனதா கட்சி வடக்கு ஒன்றியம் சார்பில் மண்டல் செயற்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் தங்கத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ஆனந்தஜெயம், மாவட்ட துணை தலைவர் கோவிந்தமூர்த்தி, மாவட்ட செயலாளர் கண்ணன், மண்டல் பார்வையாளர் சந்திரபோஸ் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய பொதுச் செயலாளர்கள் கண்ணன், முத்துக்குமார், சங்கர் கணேஷ், மண்டல் பொருளாளர் மாவீரன், ஆகியோரது ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடந்தது. இதில் தமிழக அரசின் வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் 37 ஊராட்சிகளுக்கும் சென்றடைய வேண்டும்.

    மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கிராம மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாவட்ட பொறுப்பாளர்கள், மண்டல் பொறுப்பாளர்கள், அணி மற்றும் பிரிவு தலைவர்கள், கிளை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
    • ரேசன் கடைகளில் கொடுக்கப்பட்ட பொங்கல் பொருட்களில் ஏகப்பட்ட ஊழல் நடந்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் மாவட்ட பா.ஜ.க சார்பில் மத்திய பா.ஜ.க ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.

    மூத்த தலைவர் எச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்- மாநில உள்ளாட்சி மேம்பாட்டு தலைவர் சித.பழனிச்சாமி, நகரத்தலைவர் உதயா, மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், உள்ளாட்சி மேம்பாட்டு தலைவர் பாண்டித்துரை, ரஞ்சித்குமார் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இதில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    மத்திய அரசு ரூ.42-க்கு அரிசி வழங்குகிறது. ஆனால் ரூ.2-ஐ கொடுத்துவிட்டு அதில் கருணாநிதி ஸ்டிக்கரை ஒட்டி மாநில அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் ஏழை பங்காளனாக தி.மு.க. அரசு கபட நாடகமாடிவருகிறது.

    ரேசன் கடைகளில் கொடுக்கப்பட்ட பொங்கல் பொருட்களில் ஏகப்பட்ட ஊழல் நடந்துள்ளது. அந்த ஊழலில் சம்பந்தப்படாத அமைச்சர்களே இல்லை. இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர், சிறிய தவறு நடந்துவிட்டதாகவும் அந்த பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஆனால் ஒரு நிறுவனங்கள் கூட இன்று வரை கருப்பு பட்டியலில் வைக்கப்படவில்லை.

    கடந்த ஜெயலலிதா ஆட்சியில் இருந்து அம்மா பெட்டகம் அறிவித்து அதில் 8 பொருட்களில் ஒன்றாக ஊட்டச்சத்து மாவு கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊட்டச்சத்து மாவை பொங்கல் தொகுப்பு வழங்கிய நிறுவனம்தான் கடந்த ஆண்டு 24 லட்சம் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவை வழங்கியுள்ளது.

    பொங்கல் தொகுப்பே தரமில்லாமல் வழங்கப்பட்ட நிலையில் அதே நிறுவனம் இந்த ஊட்டச்சத்து மாவை வழங்கினால் தாயும் குழந்தையும் எவ்வாறு நலமாக இருக்க முடியும் ? ஒரே, ஒரு நாள் ஊழல் இல்லாத அரசை தமிழகத்தில் நடத்தி காட்டுங்கள்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுக்கிறேன். ஆனால் அவர்களால் அது முடியாது.

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தொகுதிக்கான நலத்திட்டத்தில் பங்கேற்று செய்திகளில் வருவதை காட்டிலும், தினமும் முறைகேடு வழக்குகளுக்காக வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×